Loading...
 

பொது கிளப்புகள்

 

 

பொது கிளப்புகள் என்பது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கிளப் வகையாகும், மேலும் ஃபவுண்டேஷன் ஆனது அனைவரையும் இந்த வகை கிளப்பை உருவாக்கவே ஊக்குவிக்கிறது. உண்மையில் சொல்லப்போனால், பொது கிளப்பை உருவாக்கி வழிகாட்டியாக திகழ்ந்தால், கார்ப்பரேட் அல்லது நிபந்தனைகள் உடைய கிளப்புகளுக்கான கட்டணத்தை சில ஆண்டுகளுக்கு தள்ளுபடி செய்யும் திட்டம் எங்களிடம் உள்ளது, .

உறுப்பினருரிமை

பொதுவாக, பொது கிளப் அனைவருக்கும் திறந்த நிலையில் இருக்கும். இடம் கிடைப்பதைத் தவிர பொது கிளப்பில் சேருவதற்கு பொதுவான தேவைகள் எதுவும் இல்லை. "இடம் கிடைப்பது" என்பது இரண்டு விஷயங்களைக் குறிக்கலாம் என்பதை நினைவில் கொள்க.

  • கிளப் ஒரு இடத்தில் நேரடியாக சந்தித்தால், அனைத்து உறுப்பினர்களுக்கும் இடமளிக்க போதுமான இடம் இருக்க வேண்டும்.
  • கிளப் ஆன்லைனில் சந்தித்தால், "இடம்" என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கும் திறனையும் குறிக்கிறது. உதாரணமாக, ஆன்லைன் சந்திப்புகளில் எண்ணற்ற பங்கேற்பாளர்கள் இருக்க முடியும் என்றாலும், 150 மெய்நிகர் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கிளப்பை நிர்வகிப்பது மிகவும் கடினமாக இருக்கலாம். இந்த வகையில், தொழில்நுட்ப வரம்புகளுடன் முற்றிலும் தொடர்பில்லாத ஆன்லைன் சந்திப்புகளுக்கு கூட கிளப் இட கட்டுப்பாடுகளை விதிக்கலாம். 
ஆன்லைனில் முழுமையாகவோ அல்லது எப்போதாவது ஆன்லைனில் சந்திக்கும் கிளப்புகள் கூடுதலாக வருங்கால உறுப்பினர்கள் புவியியல் ரீதியாக கிளப்பின் பதிவுசெய்யப்பட்ட இடத்திற்கு அருகில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடை விதிக்கலாம். எந்த நேரத்திலும் கிளப் நேரடியாக சந்திக்கும் கிளப்பாக மாறலாம் என்பதால் இந்த விஷயம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அந்த நேரத்தில் நேரடியாக கலந்துக் கொள்ள இயலாததன் காரணமாக நாம் பாதி உறுப்பினர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.

உறுப்பினர் சேர்க்கைக்கான பொதுவான தேவைகள் இல்லாவிட்டாலும், கிளப்புகள் Agora Speakers International என்பவற்றின் தனித்தனியான தனியார் நிறுவனங்களாகவே இயங்குகின்றன. எனவே, உறுப்பினராக சேருவது அழைப்பிதழ் மூலம் மட்டுமே, மேலும் உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்வதைப் பொறுத்ததே: ஒரு கிளப்பின் உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட நபர், அவரின் சொந்த விவரக்குறிப்புகள், தன்மைகள் அல்லது பண்புக்கூறுகள் காரணமாக, கிளப்பின் பணிக்கு இடையூறு விளைவிக்கலாம் அல்லது சீர்குலைக்கலாம் என்று நம்பினால், அவர்கள் சுதந்திரமாக அவரை ஒரு உறுப்பினராக ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம்.

வல்லமைமிக்க பொது பாகுபாடு கொள்கையை உருவாக்க மேலே உள்ள உரிமையை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. உண்மையான பொது பாகுபாடு கொள்கை காரணமாக உங்களுக்கு உறுப்பினருரிமை மறுக்கப்படுவதாக நீங்கள் உணர்ந்தால், தயவுசெய்து Agora Speakers International இடம் புகார் செய்யவும், நாங்கள் சூழல் குறித்து ஆராய்வோம்.

வயது வரம்புகள்

Agora பொது கிளப்புகள் "இளைஞர் கிளப்புகளாக" செயல்படுவதற்கும் அனுமதிக்கிறது, இதில் வயதை அடையாதவர்களும் (குறிப்பிட்ட வயது எண் உள்ளூர் சட்ட வரையறையைப் பொறுத்தது) அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் மட்டுமே சேர முடியும்.

எவ்வாறாயினும், அனுமதிக்கப்பட்ட ஒரே வயது வரம்பு இதுதான் என்பதை மனதில் கொள்ளுங்கள். வயதுவந்தோருக்கான நாட்டின் வயது 18 என நிர்ணயிக்கப்பட்டால், "6-18 வயதுடைய குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு" மட்டுமே என்று கிளப் கூறுவது அனுமதிக்கப்படும், ஆனால் "14-20 வயதுடைய குழந்தைகள், "30 வயதிற்குட்பட்டவர்கள்", அல்லது "60 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மட்டுமே", என்பது போன்றவை அனுமதிக்கப்படாது.

 

சந்திப்பு நடைபெறும் வளாகம்

உறுப்பினர்கள் மத்தியில் மறைமுக கட்டுப்பாட்டை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் அணுகக்கூடிய இடங்களில் பொது கிளப்புகள் சந்திக்க வேண்டும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நிறுவன ஊழியர்கள் மட்டுமே சந்திப்பு நடைபெறும் கட்டிடத்தை அணுக முடியும் என்றால், அந்த கட்டிடத்தில் சந்திப்புகளை கிளப்புகள் நடத்தக் கூடாது, ஏனெனில் அவ்வாறு நடத்தினால், அது அந்நிறுவனத்தில் ஊழியர்கள் அல்லாத எவரும் உறுப்பினர் ஆவதைத் தடுக்கும். சந்திப்பு நடைபெறும் இடத்தை அணுக சில உறுப்பினர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய தேவைகள் அல்லது முயற்சிகள் வேறு சில உறுப்பினர்களை விட கடுமையாக அதிகமாக இருந்தாலும் இது பொருந்தும். மேலேயுள்ள எடுத்துக்காட்டில், ஊழியர்கள் அல்லாதவர்கள் விரிவான பின்னணி பரிசோதனை மற்றும் பல பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் ஸ்கேனிங் மற்றும் தங்களது பொருட்களை கட்டிடத்திற்கு வெளியே வைப்பது போன்றவற்றுக்கு பிறகுதான் கட்டிடத்தை அணுக முடியுமென்றால், எல்லோரும் கலந்துகொள்வதற்கான தத்துவார்த்த சாத்தியம் இருந்தபோதிலும், அந்த வளாகத்தில் பொது கிளப் சந்திப்பை நடத்துவது செல்லுபடியாகாது.

 

நிறுவனங்களில் உள்ள பொது கிளப்புகள்

வணிக நிறுவனத்தின் வளாகத்தில் சந்திக்கும், ஆனால் யாரையும் உறுப்பினராக்க அனுமதிக்கும் (ஊழியர்கள் அல்லாதவர்கள் உட்பட) மேலும் சொற்பொழிவுகளில் பேசப்படும் விஷயங்களை மட்டுப்படுத்தாத ஒரு கிளப் திறந்த நிலையிலான பொது கிளப்பாகவே கருதப்படுகிறது.

 

விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள்

பொது கிளப்புகள் பிற கிளப்புகளைச் சார்ந்த விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பல உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கலந்து கொள்ள விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் இடமளிக்க போதுமான இடவசதி (அல்லது ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்தினால் மெய்நிகர் இருக்கைகள்) இல்லை என்றால், பின்வரும் முன்னுரிமை வரிசையை பின்பற்றலாம்:

  • Agora Speakers International ஃபவுண்டேஷன் உடைய அதிகாரிகள் மற்றும் Agora Speakers International இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள் (தணிக்கை, இணக்கத்தன்மை மற்றும் வழிகாட்டல் நோக்கங்களுக்காக)
  • Agora தூதர்கள்
  • மற்ற கிளப்புகளைச் சேர்ந்த Agora உறுப்பினர்கள்
  • Agora -வை சாராத விருந்தினர்கள்
பொது கிளப்பைப் பார்வையிட மேற்கண்ட அலுவலர்கள் கொண்டிருக்கும் உரிமையானது அவர்கள் விரும்பும் எந்தப் பாத்திரங்களையும் வகிக்கலாம் என்பதைக் குறிக்கவில்லை. கிளப்பின் சந்திப்பில் பார்வையாளர்கள் என்ன பாத்திரங்களை வகிக்கலாம் என்பதை வரையறுப்பது கிளப்பின் பொறுப்பே.

அனுமதிக்கப்பட்ட பாத்திரங்களுக்கான எங்கள் பரிந்துரை பின்வருமாறு:

  • Agora தூதர்கள்: மதிப்பீடுகள், பிரிவு தலைமைப் பாத்திரங்கள் (எ.கா., விவாத நடுநிலையாளர், உடனடித் தலைப்பு சொற்பொழிவுகளின் தலைவர், முதலியன), மற்றும் பட்டறைகள்
  • மற்ற கிளப்புகளைச் சேர்ந்த Agora உறுப்பினர்கள்: அனைத்து பாத்திரங்களும்
  • Agora -வை சாராத விருந்தினர்கள்: சொற்பொழிவு மதிப்பீடுகள் மற்றும் தயார் செய்யப்பட்ட சொற்பொழிவுகள் தவிர அனைத்து பாத்திரங்களும்
கிளப்பில் உறுப்பினராக இருப்பதற்கான முழு பொறுப்புகளும் இல்லாமல் பார்வையாளர் ஒருவர் கிளப் உறுப்பினராக செயல்படும் அளவிற்கு ஒரு பொது கிளப்பிற்கு வருகை தரும் உரிமை துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது. முதலில் கூறப்பட்ட அலுவலர்களை (அதிகாரிகள் மற்றும் வாரிய உறுப்பினர்கள்) தவிர, உறுப்பினர்கள் அல்லாதவர்கள் கிளப்பில் ஒரு போலி உறுப்பினராக அந்த உரிமையைப் பயன்படுத்தத் தொடங்கினால், அவர்களின் வருகையை மறுப்பதற்கு கிளப்பிற்கு சுதந்திரம் உள்ளது.  ஒரு குறிப்பிட்ட வழிகாட்டுதலை வழங்குவது கடினம் என்றாலும், ஒரு நல்ல விதிமுறை என்னவென்றால், 4 சந்திப்புகளில் 1 சந்திப்புக்கும் அதிகமாக கிளப்பிற்கு வரும் எவரும் உறுப்பினராவதற்கு அழைக்கப்பட வேண்டும்.

ஒரு நபருக்கான அல்லது ஒரு சந்திப்பிற்கான செலவை ஈடு செய்ய வேண்டும் (எடுத்துக்காட்டாக, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டால்) என்ற குறிக்கோள் இல்லாவிட்டால், மேற்கண்ட பார்வையாளர்கள் அனைவரும் சந்திப்பில் இலவசமாக கலந்து கொள்ளலாம். அந்த சந்திப்பின் ஒட்டுமொத்த செலவுகளில் நேரடி மற்றும் அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே பார்வையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டாக, கிளப் நிலையான, மாதாந்திர வீதத்தில் அல்லது ஒவ்வொரு சந்திப்பிற்கும் என்கிற வீதத்தில் இடத்தை வாடகைக்கு எடுத்தால், பார்வையாளர் காரணமாக வாடகை விலை மாறாது, எனவே இந்த சூழ்நிலையில், விருந்தினர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

 

நிதி ரீதியான விதிமுறைகள்

பொது கிளப்புகள் கிளப்பின் செயல்பாட்டை ஆதரிப்பதற்காக தங்கள் உறுப்பினர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க தேர்வு செய்யலாம். அப்படியானால், அவர்கள் கிளப் நிதிகளுக்கான குறிப்பிட்ட விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும்.

பொது கிளப்புகள் Agora Speakers International-க்கு எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை- அமைவு (சாசனம்) கட்டணம், குறிப்பிட்ட அல்லது ஒவ்வொரு உறுப்பினருக்குமான கட்டணம் என எதுவும் இல்லை.

இறுதியாக, பொது கிளப்புகள் அவர்களின் நிதிகளைக் கண்காணிக்கவும் அறிக்கை அளிக்கவும் ஆன்லைன் Agora கணக்கியல் சிஸ்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

 

பட்டியல் ரீதியான விதிமுறைகள்

பொது கிளப்புகள் பற்றிய தகவல்கள் ... பொதுவானது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. பின்வருபவை அனைவருடனும் பகிரப்படும் தகவலின் ஒரு பகுதியாகும், இவை கிளப் அலுவலர்களால் புதுப்பித்த நிலையில் பராமரிக்கப்படும்:

பகிரப்படும் கிளப் தகவல்
தகவல் வகை பகிரப்படும் விதம்
கிளப்பின் பெயர், எண் மற்றும் சாசன தேதி பொதுவில்
சந்திப்பு அட்டவணை பொதுவில்
சந்திப்பு நடைபெறும் வளாகம் பொதுவில்
கிளப் அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு தகவல் Agora உறுப்பினர்கள்
கட்டண அமைப்பு பொதுவில்
கிளப் நிதிகள் Agora உறுப்பினர்கள்
பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள் பொதுவில்
சொற்பொழிவு உள்ளடக்க கட்டுப்பாடுகள் பொதுவில்
கிளப்பின் தொடர்பு தகவல் பொதுவில்
விருதுகள் மற்றும் பதக்கங்கள் பொதுவில்
கிளப் மொழிகள் பொதுவில்

 

Agora கல்வி மாடலை கடைபிடிப்பது

Agora கல்வி மாதிரி மற்றும் Agora கல்வி செயல்திட்டத்தை Agora கிளப்புகள் கடைபிடிக்க வேண்டும்.

குறிப்பாக, ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்தபட்சம் பின்வருபவை இடம் பெற வேண்டும் என்பதாகும்:

பின்வரும் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்:

முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் தங்களுக்குச் சொந்தமான பிற கல்வித் திட்டங்களிலிருந்து சொற்பொழிவுகள் அல்லது தனிப்பயனாக்கப்பட்ட சொற்பொழிவுகளை வழங்கினால் அது ஏற்கத்தக்கது. நமது திட்டத்தில் பட்டியலிடப்பட்டதைத் தவிர வேறு செயல்பாடுகள் கிளப்பில் இருந்தால் அதுவும் ஏற்கத்தக்கதே. "பெரும்பான்மை" விதியானது, Agora கிளப்புகள் பொதுவாகச் செய்வதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றை கிளப்புகள் செய்யாது என்பதைப் பாதுகாப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன, அப்படியானால் அத்தகையைச் செயல்பாடுகள் முதன்மையாக Agora-க்கு சொந்தமானதாக இருக்க வேண்டுமென்பதில் அர்த்தமில்லை.

பொது கிளப்களின் ஒரு சிறப்பு வரம்பு (கட்டுப்பாடு) என்னவென்றால், அவை ஏதேனும் மூன்றாம் தரப்பு தயாரிப்புகள், சேவைகள் அல்லது நிறுவனங்களை முறையாக விளம்பரப்படுத்தவோ அல்லது ஊக்குவிக்கும் வகையிலோ பயன்படுத்தப்படக்கூடாது, மேலும் சொற்பொழிவில் பேசக்கூடிய விஷயத்தை அந்த நோக்கத்திற்காக மட்டுப்படுத்தக் கூடாது.

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:00:55 CET by agora.